உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையோரங்களில் தர்பூசணி விற்பனை துவக்கம்

சாலையோரங்களில் தர்பூசணி விற்பனை துவக்கம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், சில நாட்களாக காலை நேரத்தில் பனிப்பொழிவு காணப்பட்டாலும், 10:00 மணி முதல் மாலை வரை, வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. கோடை காலங்களில் சாலையோரங்களில், இளநீர், நுங்கு, தர்பூசணி கடைகள் முளைப்பது வழக்கம். பொது மக்களும் அதிக அளவில் வாங்கிச் செல்வர். தற்போது, செங்கல்பட்டில், சாலையோரங்களில் தர்பூசணி விற்பனைக்கு வர துவங்கி உள்ளது. கிலோ 30 ரூபாய் முதல் விற்பனை செய்யும் தர்பூசணிகளை, பொதுமக்கள் மொத்தவிலை மற்றும் சில்லரை விலைக்கு ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.தர்பூசணி வியாபாரிகள் கூறியதாவது:நேரடியாக தோட்டத்தில் இருந்து, தர்பூசணி கொண்டு வந்து வியாபாரம் செய்து வருவதால், பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.அதே போல, இளநீர் 30 முதல் 60 ரூபாய் வரையும், நான்கு நுங்குகள் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை