உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பஸ் மோதி இறந்த வாலிபர் பெற்றோருக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு

பஸ் மோதி இறந்த வாலிபர் பெற்றோருக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு

சென்னை:கடலுார் மாவட்டம், லால்புரத்தைச் சேர்ந்தவர் ரீகன் ரோஜாரியோ, 25; தனியார் நிறுவன ஊழியர். இவர், 2017 ஜூலை 15ல் மதனபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி, தன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, மாநகர பேருந்து மோதி உயிரிழந்தார்.இந்த நிலையில், மகனின் இறப்புக்கு இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், ரீகன் ரோஜாரியோவின் தாய் மரியசெலாஸ்டின் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி ஜெ.கே.திலீப் முன் நடந்தது.இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:விபத்தில் மனுதாரரின் மகன் கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயத்தால், உடலில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறி உள்ளது. இதனால் இறப்பு ஏற்பட்டுள்ளது என, மருத்துவ ஆவணங்கள் வாயிலாக தெரிகிறது.மனுதாரரின் மகன் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க, போதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. அதிவேகம், அஜாக்கிரதையாக பேருந்தை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்பதால், மனுதாரருக்கு 23.94 லட்சம் ரூபாய் இழப்பீடாக, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், மாநகர போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை