உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வங்கியில் பணம் செலுத்த வந்தவரிடம் ரூ.92,000 அபேஸ்; 2 பெண்களுக்கு வலை

வங்கியில் பணம் செலுத்த வந்தவரிடம் ரூ.92,000 அபேஸ்; 2 பெண்களுக்கு வலை

திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியம், சந்தானகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ், 53. விவசாயி. இவரது மனைவி சாந்தி, 48, என்பவர், மகளிர் சுயஉதவிக் குழு தலைவியாக உள்ளார்.இவர், குழுக் கடன் வாங்கிய மகளிரிடம் இருந்து பணத்தை வசூலித்து திருத்தணி ம.பொ.சி. சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் பணம் கட்டுவது வழக்கம். அந்த வகையில், மகளிரிடம் இருந்து வசூலித்த தொகை, 2 லட்சம் ரூபாயை சாந்தி நேற்று, கணவரிடம் கொடுத்து வங்கியில் செலுத்திவிட்டு வருமாறு கூறி, திருத்தணி வங்கிக்கு அனுப்பினார்.அவரும், மதியம் 2:30 மணிக்கு பணத்துடன் வந்து, வங்கியில் முதல் தவணையாக, 1.02 லட்சம் ரூபாயை குழு கணக்கில் கட்டினார்.பின், மற்றொரு கடன் கணக்கில், 92,000 ரூபாய் கட்டுவதற்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து, பணத்தை பிளாஸ்டிக் கவர் வைத்துக் கொண்டு வரிசையில் நின்றிருந்தார்.வங்கி அலுவலரிடம் விண்ணப்பத்தை கொடுத்துவிட்டு பிளாஸ்டிக் கவரை பார்த்த போது கவர் கிழிக்கப்பட்டும், பணம் திருடு போனதும் தெரிய வந்தது.தொடர்ந்து, மோகன்தாஸ் திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார், வங்கிக்கு வந்து பெண் மேலாளருடன் நடந்த சம்பவத்தை கூறி, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக ஆய்வு செய்தார்.அதில், மோகன்தாஸ் பின்னால் ஒரு பெண் சுடிதார் அணிந்தும், மற்றொரு பெண் சேலை அணிந்தும், வரிசையில் நின்றிருந்தனர்.சிறிது நேரத்தில் வரிசையில் நிற்காமல் இரண்டு பெண்களும் அவசரம், அவசரமாக வங்கியில் இருந்து வெளியே சென்றதும் தெரிய வந்தது.அதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய இரண்டு பெண்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை