ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட மாநாடு
செங்கல்பட்டு:தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், செங்கல்பட்டு மாவட்டத்தின் இரண்டாவது மாவட்ட மாநாடு, மாவட்ட தலைவர் சுதர்சன் தலைமையில், திருமணியில் நடந்தது.இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளை பிரித்து, வேடந்தாங்கலை தலைமையிடமாக கொண்டு, புதிய ஊராட்சி ஒன்றியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி செயலர், சத்துணவு ஊழியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.ஊரக வளர்ச்சி பிரிவில் தலைமை அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.