உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  ஸ்ரீ கோகுலம் பொதுப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 ஸ்ரீ கோகுலம் பொதுப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

செங்கல்பட்டு: நென்மேலி ஸ்ரீ கோகுலம் பொதுப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. செங்கல்பட்டு அடுத்த நென்மேலியில், ஸ்ரீ கோகுலம் பொதுப்பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில், ப்ரிக்ரிதி அறிவியல் கண்காட்சியில் புதுமை கண்டுபிடி உத்வேகம் - ஐ 3 என்றும் தலைப்பில், பள்ளி தலைவர் கோகுலம் கோபாலன் தலைமையில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இணை இயக்குநர் டாக்டர் ராஜேஷ் கணேசன் பங்கேற்று, கண்காட்சியைதுவக்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் சங்கரநாராயணன் வரவேற்றார். கண்காட்சியில், மாணவர்களின் அறிவியல் தொடர்பான இயங்குநிலை மாதிரிகள் மற்றும் இயங்கா மாதிரிகள் இடம் பெற்றிருந்தன. பல்வேறு பள்ளிகளில் இருந்து 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் பார்வையிட்டனர். கண்காட்சியில் தனித்திறமையை வெளிப்படுத்தி, முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு, தங்கப்பதக்கம், இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு, வெள்ளிப்பதக்கம் ஆகியவற்றை, எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன துணை பேராசிரியர் டாக்டர் அனிதா வழங்கினார். பள்ளியின் துணைத்தலைவர்கள் பிரவின், லிஜிஷா பிரவின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நென்மேலி ஸ்ரீ கோகுலம் பொதுப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ