உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகத்தில் ஸ்கூட்டர் திருட்டு

மதுராந்தகத்தில் ஸ்கூட்டர் திருட்டு

மதுராந்தகம்:மதுராந்தகம் செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 56. இவர் நேற்று, தனக்கு சொந்தமான,'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரை, மதுராந்தகம் நைல்நகரில் நிறுத்திவிட்டு, நடைபயிற்சி மேற்கொண்டார்.நடைபயிற்சி முடித்துவிட்டு வந்து பார்த்த போது, ஸ்கூட்டர் திருடு போயிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மதுராந்தகம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி