சிற்ப கல்லுாரி மாணவர்கள் கல்வி சுற்றுலா
மாமல்லபுரம்; தமிழக கலை, பண்பாட்டு துறையின்கீழ், அரசு கட்டடம் மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரி, மாமல்லபுரத்தில் இயங்குகிறது.அங்கு பயிலும் மாணவ - மாணவியர், நாட்டில் உள்ள பாரம்பரிய கட்டடம், சிற்பம், ஓவியம் ஆகியவை குறித்து அறிவதற்காக, துறை சார்பில் ஆண்டுதோறும் கல்வி பயிற்சி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.அதற்காக, ஆண்டுதோறும் நான்கு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போதும், முதலாமாண்டு மாணவர்கள், வட மாவட்ட பாரம்பரிய பகுதிகள், இரண்டாமாண்டு மாணவர்கள் தென்மாவட்ட பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்திற்கும் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.மூன்றாமாண்டு மாணவர்கள் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள், இறுதியாண்டு மாணவர்கள், வட இந்திய மாநிலங்கள் என, சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக, கல்லுாரி முதல்வர் ராமன் தெரிவித்தார்.