உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புத்திரன்கோட்டை கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளில் நாற்று வளர்ந்த அவலம்

புத்திரன்கோட்டை கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளில் நாற்று வளர்ந்த அவலம்

சித்தாமூர்:புத்திரன்கோட்டை கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்து அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள், மழையில் நனைந்ததால், தற்போது நாற்று வளரத் துவங்கி உள்ளது.செய்யூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில், 30,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் உள்ளது.அதிகப்படியாக சம்பா பருவத்தில் நெல் மற்றும் மணிலா பயிரிடப்படுகிறது. சம்பா பருவத்தில் அக்., நவ., டிச., மாதங்களில் பயிரிடப்பட்ட நெல் விளைந்து, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய, செய்யூர் மற்றும் மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், 86 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன.கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால், சித்தாமூர் அடுத்த புத்திரன்கோட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த நெல் மூட்டைகள் நனைந்தன.இதில், 200க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளில், தற்போது முளைப்பு ஏற்பட்டு, நாற்று வளரத் துவங்கி உள்ளது.எனவே, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் ஆய்வு செய்து, கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை, உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்த ஆண்டு பல இடங்களில், நெல் கொள்முதல் நிலையங்களில் முறையான பராமரிப்பு இல்லாமல், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகி உள்ளன. இதனால், அரசுக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை