உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போதை பொருளின் தீமைகள் அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

போதை பொருளின் தீமைகள் அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

செங்கல்பட்டு, ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரியில், போதை பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்த கருத்தரங்கம், நேற்று நடந்தது. செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரியில், போதை பொருள் எதிர்ப்பு மன்றம் உள்ளது. இக்கல்லுாரியின் வேதியியல் துறை சார்பில், 'போதை பொருட்கள் பயன்பாட்டின் தீய விளைவுகளின் வேதியியல் மற்றும் அதன் சமூக தாக்கங்கள்' என்ற தலைப்பில், மாநில அளவிலான கருத்தரங்கம், கல்லுாரி முதல்வர் சீனிவாசன் தலைமையில், நேற்று நடந்தது. வேதியியல் துறைத் தலைவர் வனிதா வரவேற்றார். இதில், சென்னை பல்கலை பகுப்பாய்வு துறை தலைவர் ஸ்ரீதர், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மலர்விழி, இயற்பியல் துறைத் தலைவர் ராஜராஜன் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக, போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், அரசு மற்றும் தனியார் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை