மேலும் செய்திகள்
கஞ்சா வழக்கில் மூவர் கைது
16-Oct-2024
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியில் உள்ள சலுானில், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தாலுகா போலீசார் மற்றும் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சலுானில் சோதனை நடத்தினர். அதில், பாலியல் தொழில் நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, பாலியல் தொழில் நடத்திய சிங்கபெருமாள் கோவில் அடுத்த பெரிய செங்குன்றம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், 32, என்பவரை கைது செய்தனர்.மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு இளம்பெண்களை போலீசார் மீட்டு அழைத்து சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.
16-Oct-2024