உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆட்சீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம் விமரிசை

ஆட்சீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம் விமரிசை

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில் தொண்டை நாட்டு சிவ ஸ்தலங்களில் ஒன்றானதும், சைவ சமய குறவர்களால் பாடல் பெற்றதுமான, புகழ்பெற்ற இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.இக்கோவிலில், நேற்று, மார்கழி மாத சனி பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடந்தது.இதில், நந்தியம் பெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், உள்ளிட்டவற்றால், அபிஷேகம் செய்யப்பட்டது.வெள்ளிக்கவசம் அணிவித்து, கோவில் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க, மேல தாளங்கள் ஒலிக்க, சங்கொலி முழங்க மஹா தீபாரதனை நடந்தது.தொடர்ந்து, நந்தி வாகனத்தில் ஆட்சீஸ்வரரும், இளங்கிளி அம்மனும், கோவிலின் உட்பிரகாரத்தில், வலம் வந்து, அருள் பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை