மேலும் செய்திகள்
மூன்று சிறந்த அரசு பள்ளிகளுக்கு கேடயம்
12-Nov-2024
செங்கல்பட்டு:தமிழகம் முழுதும், மாவட்டந்தோறும் சிறந்த மூன்று பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு கேடயம் வழங்க, தொடக்க கல்வி இயக்குனர், கடந்த 7ம் தேதி உத்தரவிட்டார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில், புழுதிவாக்கம் நடுநிலைப்பள்ளி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில், ராயமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியத்தில், பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.இப்பள்ளிகள், கட்டமைப்பு வசதி, சுகாதாரம், மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வருகை மற்றும் புதிய மாணவர் சேர்க்கையில் சிறந்து விளங்குகின்றன.இந்த கல்வி ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளாக, மேற்கூறிய மூன்று பள்ளிகளை தேர்வு செய்து, தொடக்கக்கல்வி இயக்குனருக்கு, மாவட்ட கல்வி அலுவலர் அனுப்பி வைத்தார்.அவற்றில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து, அவற்றுக்கு கேடயங்கள் வழங்க, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். இதற்கான விழா, சென்னை சந்தோம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், 14ம் தேதி காலை 8:00 மணிக்கு நடக்கிறது.
12-Nov-2024