மேலும் செய்திகள்
சேதமான பெயர் பலகை மாற்ற நடவடிக்கை தேவை
29-Aug-2025
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த எல்.எண்டத்துாரில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பெயர் பலகை அகற்றப்பட்டு, பள்ளியின் உள்ளே வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எல்.எண்டத்துாரில் உத்திரமேரூர், மேல்மருவத்துார் பகுதிகளுக்கு இடதுபுறம் மற்றும் வலதுபுறம் சாலை பிரிந்து செல்கிறது. இந்த இடத்தில், வாகன ஓட்டிகளின் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில், வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டது. நாளடைவில், இந்த பெயர் பலகையின் அடிப் பாகம் சேதமடைந்ததால், நெடுஞ்சாலைத் துறையினர் வழிகாட்டி பெயர் பலகையை அகற்றி, எல்.எண்டத்துார் அரசினர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வைத்துள்ளனர். தற்போது, இந்த பெயர் பலகையைச் சுற்றி செடிகள் வளர்ந்து, பெயர் பலகை வீணாகி வருகிறது. பல மாதங்களாகியும், வழிகாட்டி பலகை மீண்டும் வைக்கப்படவில்லை. வழிகாட்டி பலகை இல்லாததால், பல்வேறு பகுதியிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், எல்.எண்டத்துாரில் வழி தெரியாமல் தவிக்கின்றனர். எனவே, அகற்றப்பட்ட வழிகாட்டி பெயர் பலகையை, உடனடியாக நெடுஞ்சாலைத் துறையினர் அதே இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29-Aug-2025