பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட பழங்குடியின இளைஞர்களுக்கு நாளை, திறன் பயிற்சி முகாம் நடக்கிறது. தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறை, 'தொல்குடித் தொடுவானம்' திட்டத்தின் மூலமாக, பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்குகிறது. இந்த பயிற்சி முகாம் சேலம், மல்லுாரில் உள்ள தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில், நாளை காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது. முகாமில், கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி, துணை சுகாதார படிப்புகள், டிராக்டர் உற்பத்தி மெக்கானிக் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 33 வயதுக்கு உட்பட்ட, பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்கலாம். விபரங்களுக்கு 97905 74437 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.