உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிராமப்புறங்களில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் மந்தம்

கிராமப்புறங்களில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் மந்தம்

செய்யூர்:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. 48 மணி நேரத்திற்குள், அரசியல் தலைவர்கள், கட்சிகளின் கொடிகள், சுவர் விளம்பரங்கள் ஆகியவை அகற்றப்பட வேண்டும்.ஒரு சில இடங்களில் கட்சிக் கொடி, சுவர் விளம்பரங்கள், பேனர்கள், சிலைகள் மூடப்பட்டு வருகின்றன.ஆனால், செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சித்தாமூர், பவுஞ்சூர், சூணாம்பேடு போன்ற பகுதிகளில், சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படாமல் உள்ளன. மேலும், பல்வேறு இடங்களில், கட்சிக் கொடிகள் மற்றும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன.குறிப்பாக, அகரம், கயநல்லுார், பொலம்பாக்கம் ஆகிய பகுதிகளில், அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன.மேலும், பல கிராமப்புறங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக அமல்படுத்தாமல் இருப்பது, சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், கிராமப்புறங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி