கலெக்டர் வளாகத்தில் சிறுதானிய உணவகம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மகளிர் திட்டத்தின் சார்பில், சிறுதானிய உணவகம் மற்றும் மீன்வளத்துறை சார்பில், நடமாடும் மீன் உணவு விற்பனை உணவகங்கள் அமைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், நேற்று முன்தினம், திறந்து, விற்பனையை துவக்கி வைத்தார்.இதில், மகளிர் திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் காஜா சாகுல் அமீது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த உணவகங்கள், அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து, அனைத்து நாட்களிலும் இயங்கும் என, மகளிர் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.