வித்யாசாகர் பள்ளியில் விளையாட்டு போட்டி
செங்கல்பட்டு:வித்யாசாகர் குளோபல் பள்ளியில், 18வது ஆண்டு விளையாட்டு போட்டி நடந்தது. செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளி, 18வது ஆண்டு விழா, கல்வி குழும தாளாளர் விகாஸ் சுரானா தலைமையில், பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. பள்ளி முதல்வர் கோவிந்தராஜன் வரவேற்றார். இன்டர்நேஷனல் பள்ளி, ஒமேகா கிளை விளையாட்டு இயக்குநர் அரவிந்த் சங்கரன் பங்கேற்று, போட்டியை துவக்கி வைத்தார். இதில் யோகா, சிலம்பம், கராத்தே, பிரமிட் மற்றும் கண்ணைக் கவரும் வகையில் கூட்டு பயிற்சிகள் ஆகிய போட்டிகளில், மாணவர்கள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்களும் பங்கேற்றனர். முன்னதாக, விளையாட்டு பிரிவு தலைவி நித்யா வரவேற்றார். விளையாட்டு துறை தலைவர் முத்துச்செல்வன் நன்றி கூறினார்.