உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் வசந்தகால உத்சவ விழா துவக்கம்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் வசந்தகால உத்சவ விழா துவக்கம்

திருப்போரூர்:திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், வசந்த உத்சவ விழா நடைபெறுவது வழக்கம்.நடப்பாண்டிற்கான விழா நேற்று துவங்கியது. மாலை 6:00 மணிக்கு உத்சவ மூர்த்தியான கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன், கோவிலுக்கு அருகில் உள்ள வசந்த மண்டபத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகமும், சோடச தீபாராதனைகளும் நடைபெற்றன. பின், மீண்டும் கோவிலை வந்தடைந்தார்.இவ்வாறு ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவில் கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன், வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்வார்.விழா, வரும் 12ம் தேதி நிறைவடைகிறது. அன்று, திருக்கல்யாண உத்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை