உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாநில கூடைப்பந்து போட்டி ரைசிங் ஸ்டார் சாம்பியன்

மாநில கூடைப்பந்து போட்டி ரைசிங் ஸ்டார் சாம்பியன்

சென்னை:போடி கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில், மாநில அளவிலான மின்னொளி கூடைப்பந்து போட்டி, தேனி மாவட்டம் போடியில் நடந்ததுஇருபாலருக்கான போட்டியில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கல்லுாரி, கிளப், சங்க அணிகள் பங்கேற்றன. 'லீக்' முறையில் போட்டிகள் நடந்தன.பெண்களுக்கான போட்டியில், சென்னையைச் சேர்ந்த ரைசிங் ஸ்டார் கிளப் அணி, ஜே.ஐ.டி., அணியை, 71 - 47 என்ற நேர் செட் கணக்கிலும், எத்திராஜ் அணியை, 54 - 31 என்ற நேர் செட் கணக்கிலும் தோற்கடித்தது. தொடர்ந்து, கடைசி 'லீக் 'போட்டியில், ரைசிங் ஸ்டார் அணி, 61 - 26 என்ற நேர் செட் கணக்கில் '0205' கூடைப்பந்து கிளப் அணியை வீழ்த்தியது. அனைத்து போட்டிகளின் முடிவில், ரைசிங் ஸ்டார் முதலிடத்தையும், '0205' கிளப், எத்திராஜ், ஜே.ஐ.டி., ஆகிய அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்