உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நிறுத்தப்பட்ட வீரபோகம் சாலை அமைக்கும் பணி மீண்டும் துவக்கம்

நிறுத்தப்பட்ட வீரபோகம் சாலை அமைக்கும் பணி மீண்டும் துவக்கம்

பவுஞ்சூர், : பவுஞ்சூர் அருகே செங்காட்டூர் - வீரபோகம் கிராமம் செல்லும் 3.5 கி.மீ., அளவிலான தார் சாலை உள்ளது.இந்த சாலையை செங்காட்டூர், பாக்குவாஞ்சேரி, அனுமந்தபுரம், மருதேரி, பெரும்பாக்கம் ஆகிய கிராம மக்கள், தினசரி பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்குச் சென்று வர பயன்படுத்துகின்றனர்.சாலையின் நடுவே வீரபோகம் ஏரியின் நீர்வரத்துக் கால்வாயை கடக்கும் தரைப்பாலம் உள்ளது.தரைப்பாலம், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. நாளடைவில், தரைப்பாலம் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டதால், இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகி சிரமப்பட்டு வந்தனர்.ஊரக வளர்ச்சித் துறை சார்பாக, 1.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 30 மீட்டர் நீளம், 7.5 மீட்டர் அகலம் அளவுடைய புதிய பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆக., மாதம் பணி துவங்கியது.அடித்தளம் அமைக்கும் பணி நடந்துவந்த நிலையில் பருவமழை துவங்கியதால், நீர்வரத்துக் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.கடந்த மூன்று மாதங்களாக தண்ணீர் வற்றாத நிலையில், பாலம் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மோட்டார் மூலமாக தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ