உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏ.டி.எம்., மையத்தில் திடீர் மின் கசிவு

ஏ.டி.எம்., மையத்தில் திடீர் மின் கசிவு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு வேதாசலம் நகர் பகுதியில், முக்கிய வங்கிகள் மற்றும் அதன் ஏ.டி.எம்., மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த பகுதியில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்., மையத்தில், நேற்று அதிகாலை கரும்புகை வெளியேறியது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், செங்கல்பட்டு நகர போலீசார் மற்றும் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து கரும் புகை பரவாமல் தடுத்தனர். தீப்பற்றாமல் தடுக்கப்பட்டதால், ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் காப்பாற்றப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், மின் கசிவு காரணமாக மின்வடங்கள் கருகி, மின் விபத்து ஏற்பட்டது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை