உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சாலையை ஆக்கிரமித்துள்ள காயலான் கடையால் அவதி

 சாலையை ஆக்கிரமித்துள்ள காயலான் கடையால் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, நெஞ்சாலையை ஆக்கிரமித்து பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடைகள் நடத்தப்படுவதால், விபத்து அபாயம் நிலவுகிறது. செங்கல்பட்டு -- பூதுார் செல்லும் சாலை 20 கி.மீ., துாரம் உடையது. ஒத்திவாக்கம், பொன்விளைந்தகளத்துார், புன்னப்பட்டு, ஆனுார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். இந்த சாலையில் ஆலப்பாக்கம் ஊராட்சி, வ.உ.சி., நகர் பகுதியில், அடுத்தடுத்து மூன்று பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கும் 'காயலான்' கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள், மூட்டை மூட்டையாக சாலையை ஆக்கிரமித்து, அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இப்பகுதியில் பழைய இரும்பு பொருட்களை சாலையிலேயே வைத்து உடைப்பதால், இரும்பு துண்டுகள் வாகனங்களின் டயர்களை பஞ்சராக்குகின்றன. அத்துடன், சரக்கு வாகனங்களை சாலை நடுவே நிறுத்தி இரும்பு பொருட்களை ஏற்றுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. இந்த காயலான் கடைகளால் பெரும் விபத்து ஏற்படும் முன், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை