உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை புறநகர் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள். பற்றாக்குறை விபத்து, குற்ற சம்பவங்களை கண்டறிவதில் சிக்கல்

செங்கை புறநகர் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள். பற்றாக்குறை விபத்து, குற்ற சம்பவங்களை கண்டறிவதில் சிக்கல்

மறைமலை நகர், அக். 3- செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில், போதிய அளவு கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததா லும், ஏற்கனவே அமைக்கப்பட்டவை பராமரிப்பின்றி உள்ளதாலும், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் மறைமலை நகர், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு ஆகிய மூன்று நகராட்சிகள், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட 39 ஊராட்சிகள் உள்ளன. இதில் மறைமலை நகர் சிப்காட், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், பொத்தேரி, வண்டலுார் உள்ளிட்ட பகுதிகளில் பல்கலைக் கழகங்கள், மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. இதன் காரணமாக வீராபுரம், பரனுார், சிங்கபெருமாள் கோவில், ஊரப்பாக்கம், வண்டலுார் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில், நாளுக்கு நாள் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களைச் சேர்ந்த பலர் குடியேறி வருகின்றனர். இந்த பகுதிகளில், போதிய அளவு கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், குற்றச்சம்பவங்கள் ஏற்படும் போது, குற்றவாளிகளை கண்டறிவதில் சிரமம் மற்றும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதிகளில் ஜி.எஸ்.டி., சாலை, திருப்போரூர் -- செங்கல்பட்டு, காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளில், சம்பந்தப்பட்ட வாகனங்களை அடையாளம் காண்பதிலும் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் போதிய அளவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்காததால், இந்த பகுதிகளில் நடைபெறும் திருட்டு, மொபைல் போன், செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் போ லீசாருக்கு சிக்கல் உள்ளது. செங்கல்பட்டு புறநகரில், ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பிலும், தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு நிதி மூலமாகவும், முக்கிய சாலை சந்திப்புகள், மேம்பாலங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டாலும், அவற்றை முறையாக பராமரிப்பது இல்லை. குறிப்பாக, மக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் செல்லும் சாலை, கோவில்கள், பஜார் வீதிகளில் கேமராக்கள் இல்லை. குடியிருப்போர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கூட, தங்கள் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் வரை, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது இல்லை. தனி நபர்கள் தங்களின் வீடுகளில் கேமராக்கள் பொருத்தினால், அந்த பகுதியில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் குறித்து, போலீசார் அவர்கள் வீட்டிற்கு சென்று, கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். இதனால், தங்களுக்கு சி க்கல் ஏற்படுமோ என, தனி நபர்கள் பலர் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க தயக்கம் காட்டி வருகின்றனர். அதேபோல, நெடுஞ்சாலை ஓரங்களில் அமைக்கப்பட்ட கேமராக்கள், பெரும்பாலும் காட்சி பொருளாகவே மாறி உள்ளன. எனவே, ஏற்கனவே உள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து பராமரிக்கவும், தேவையான இடங்களில் புதிதாக கேமராக்கள் பொருத்தவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மறைமலை நகர் நகராட்சி பகுதியில், 2023ம் ஆண்டு முக்கிய சந்திப்புகளில், 72 கேமராக்கள் அமைக்கப்பட்டன. தற்போது ரயில் நிலைய ம் செல்லும் சாலை, பேரமனுார் ரயில்வே கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கேமராக்கள் அவசியம்

இது குறித்து, போலீசார் கூறியதாவது: விபத்து மற்றும் குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் மற்றும் வாகனங்களை அடையாளம் காண, 'போலீசாரின் மூன்றாவது கண்' எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் முக்கியமானதாக உள்ளன. திருட வரும் நபர்கள் கூட, கேமராக்களைப் பார்த்து, திருடாமல் செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சமீபத்தில் சிங்கபெருமாள் கோவிலில், தி.மு.க., பிரமுகர் வீட்டில் 120 சவரன் திருட்டு, பெரிய விஞ்சியம்பாக்கம் பகுதியில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கு, சிங்கபெருமாள் கோவிலில் மூதாட்டியிடம் செயின் திருட்டு போன்ற வழக்குகளில், கண்காணிப்பு கேமராக்கள் இருந்ததால், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டனர். திருக்கச்சூர், வி.ஐ.பி.நகர், ஆத்துார், ஆப்பூர் பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடந்த இடங்களில் கேமராக்கள் இல்லாததால், குற்றவா ளிகளை தேடி வருகிறோம். கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் குறித்து, குடியிருப்புவாசிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வீணாகும்

அவலம்

ஜி.எஸ்.டி., சாலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் மகேந்திரா வேர்ல்டு சிட்டி, சிங்கபெருமாள் கோவில், மெல்ரோசாபுரம், மறைமலை நகர், பொத்தேரி, காட்டாங்கொளத்துார், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில், கேமராக்கள் அமைக்கப்பட்டன. முறையான பராமரிப்பு இல்லாமல், தற்போது அவை வீணாகி வருகின்றன.

எந்

தெந்த பகுதிகளில்

அவசியம்

புறநகர் பகுதியில் உள்ள அனைத்து ஜி.எஸ்.டி., சாலை சந்திப்புகள், பேரமனுார், சட்டமங்கலம், ஆப்பூர் சாலை, திருக்கச்சூர், தெள்ளிமேடு, அனுமந்தபுரம், செட்டிபுண்ணியம், டாக்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கேமராக்கள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை