உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மறைமலை நகர், மாமல்லைக்கு சுவச் சர்வேக் ஷன் விருது

மறைமலை நகர், மாமல்லைக்கு சுவச் சர்வேக் ஷன் விருது

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சியில், 2017ம் ஆண்டு முதல், துாய்மை பாரத இயக்கம் மற்றும் 2022ம் ஆண்டு முதல் தமிழக அரசின் நகரங்களின் துாய்மைக்கான மக்கள் இயக்கம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இந்த திட்டங்களின் கீழ், நகராட்சி முழுதும் சேகரமாகும் மட்கும் மற்றும் மட்காத குப்பையை தரம் பிரித்து பெறப்பட்டு, நான்கு இடங்களில் நுண்ணுரம் தயாரிக்கப்பட்டு, 'செழிப்பு' என்ற பெயரில் விவசாயிகளுக்கு இலவசமாகவும், பொது மக்களுக்கு கிலோ 20 ரூபாய்க்கும், நகராட்சி சார்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் குப்பை, எரிபொருள் பயன்பாட்டிற்காக, சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.மேலும் குப்பையை கையாளும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுவர் ஓவியங்கள் மரம் நடுதல், நீர்நிலைகளை சுத்தம் செய்தல், மாரத்தான் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறன.இந்த பணிகளை பாராட்டி, தமிழக அளவில் துாய்மையான நகராட்சி எனவும், தரவரிசையில் 702வது இடத்திலும் உள்ளதாக, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர வளர்ச்சி துறை சார்பில், மறைமலை நகர் நகராட்சிக்கு 'சுவச் சர்வேக் ஷன்' விருது வழங்கப்பட்டது.டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர வளர்ச்சி துறை செயலர் மனோஜ் ஜோஷி, அதற்கான சான்றிதழை, மறைமலை நகர் நகராட்சி தலைவர் தி.மு.க., சண்முகத்திடம் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில், மறைமலை நகர் நகராட்சி கமிஷனர் சவுந்தரராஜன், நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.அதேபோல், பேரூராட்சி பகுதிகளில் மாமல்லபுரம் பேரூராட்சிக்கு, 'சுவச் சர்வேக் ஷன்' விருது வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ