மேலும் செய்திகள்
ஆனந்த நடராஜர் கோவிலில் ருத்ர அபிஷேகம்
09-Dec-2025
பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் உள்ளது. இங்கு சிவகாமசுந்தரி நடராஜர் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். 63 நாயன்மார்கள் சன்னதியும் உள்ளது. அறுபத்து மூவருக்கும் பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ருத்ராட்சை, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் சிவனடியார்கள் திரளாக திருவாசகம் முற்றோதல் செய்தனர். அப்போது விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி ரிஷப வாகனத்தில் வீற்றிருந்தார். ஏராளமானவர்கள் தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
09-Dec-2025