உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

திருக்கழுக்குன்றம்:எடையூர் செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. திருக்கழுக்குன்றம் அடுத்த, எடையூர் கிராமத்தில், செல்வவிநாயகர், கிராமதேவதை பிடாரி செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்களில், கும்பிஷேக விழா நடத்த முடிவு செய்து, திருப்பணி செய்ய, எடையூர், மேட்டுவீரகுப்பம், பள்ளவீரகுப்பம் ஆகிய கிராம மக்கள் மற்றும் திருப்பணி குழு நிர்வாகிகள் செய்ய முடிவு செய்தனர். திருப்பணிகள் நிறைவுபெற்று, கும்பாபிஷேக விழா, விநாயகர் பூஜையுடன், நேற்றுமுன்தினம் துவங்கியது. தொடர்ந்து, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜையுடன், கலசங்கள் புறப்பட்டு, கோபுரங்களுக்கு, புனிதநீர் ஊற்றி, கும்பபிஷேகம் நேற்று நடைபெற்றது. செல்வவிநாயகர், கிராமதேவதை செல்லியம்மனுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. எடையூரை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை