உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெண் குளிப்பதை எட்டிப் பார்த்தவர் கைது

பெண் குளிப்பதை எட்டிப் பார்த்தவர் கைது

செய்யூர்:செய்யூர் அருகே ஜமீன்புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் 40. இவர், அப்பகுதியில் உள்ள பெண் ஒருவர் வீட்டு குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கும் போது, புளிய மரத்தின் மீது ஏறி எட்டிப் பார்த்துள்ளார். இதை பார்த்த அப்பெண் கணவரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அப்பகுதியினர், சுரேஷை கண்டித்தபோது, அவர் தரக்குறைவாக பேசியதோடு, அத்தம்பதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண் செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி வழக்கு பதிந்த போலீசார், சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை