பெண்ணிடம் செயின் பறித்த வாலிபரை பிடித்த பயணியர்
தரமணி : பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சீதா, 55. நேற்று, தரமணி ரயில் நிலையத்தில் இருந்து படியில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, பின்னால் வந்த நபர், சீதா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்துவிட்டு தப்பி செல்ல முயன்றார். உடனே, சக பயணியர் அவரை பிடித்து, திருவான்மியூர் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ், 28, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.