உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நெல் கொள்முதல் செய்யும் பணி பழையனுாரில் துவக்கம்

நெல் கொள்முதல் செய்யும் பணி பழையனுாரில் துவக்கம்

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே பழையனுார் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் விவசாயமே பிரதான தொழிலாகும்.இதில், பழையனுார் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உபகரணங்கள் மற்றும் கோணிப்பைகள் எடுத்து வந்து 22 நாட்களாகியும், கொள்முதல் செய்யாமல் இருப்பதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, கடந்த ஐந்து நாட்களுக்கு முன், நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட துவங்கியது. இதனால், நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் குவியலை கொட்டி வைத்து, பாதுகாத்து வந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதுவரை பதிவு செய்யப்பட்ட ஒன்பது விவசாயிகளிடமிருந்து, 40 கிலோஎடை கொண்ட, 1,221 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், மதுராந்தகம் அருகே வில்வராயநல்லுாரில் உள்ள குடோனுக்கு அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி