உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சரக்கு வாகனம் திருட்டு

சரக்கு வாகனம் திருட்டு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் காந்தி சாலை தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 54. இவருக்கு சொந்தமான 'மஹிந்திரா' சரக்கு வாகனத்தை வைத்து தொழில் செய்து வந்தார்.நேற்று அதிகாலை, தன் வீட்டின் அருகே சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் சரக்கு வாகனத்தை திருடி சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து, மணிவண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில், செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ