மேலும் செய்திகள்
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
29-Sep-2024
திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த ஆலத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சங்கரநாராயணன், 80. இவர், தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். அவ்வப்போது ஆலத்துார் கிராமத்திற்கு வந்து, அங்குள்ள வீட்டில் தங்கி செல்வார்.கடந்த 19ம் தேதி வீட்டிற்கு வந்து தங்கி சென்ற அவர், மீண்டும் நேற்று முன்தினம் வந்துள்ளார். அப்போது, வீட்டின் பின்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த, 10,000 ரூபாய், சில வெள்ளிப் பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன.அதேபோல், அப்பகுதியில் உள்ள நகை அடகு கடையிலும், கொள்ளை முயற்சி நடந்துள்ளது. மர்ம நபர்கள் கடையின் பின்புற சுவரில் துளையிட முயற்சி செய்துள்ளனர். கான்கிரீட் சுவராக இருந்ததால், உடைக்க முடியாமல் பாதியில் விட்டு சென்றுள்ளனர்.இதுகுறித்தும், திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
29-Sep-2024