உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பல்லாங்குழியான சாலை திருக்கச்சூர்வாசிகள் அவதி

பல்லாங்குழியான சாலை திருக்கச்சூர்வாசிகள் அவதி

மறைமலைநகர், மறைமலைநகர் -- திருக்கச்சூர் இடையே 5 கி.மீ., நீள நெடுஞ்சாலை உள்ளது. இந்த தடத்தில் திருக்கச்சூர், பேரமனுார், பனங்கொட்டூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.இந்த சாலை சிங்கபெருமாள் கோவில் -- ஒரகடம் சாலையின் இணைப்பு சாலை.பிரதான சாலையான சிங்கபெருமாள் கோவில் பகுதியில் திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல் ஏற்படும் போதும், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் ரயில்வே 'கேட்' பழுது ஏற்படும் போதும், வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில் பேரமனுார் -- பனங்கொட்டூர் இடையே 2.20 கி.மீ., துாரம், 2 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பில் விரிவாக்க பணிகள், கடந்த ஆண்டு நடைபெற்றன.தற்போது இந்த சாலையில் பனங்கொட்டூர் -- திருக்கச்சூர் இடையேயான சாலை, 1 கி.மீ., துாரம் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: இந்த சாலையில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. சாலை பள்ளங்களில் கார்கள் சிக்கி சேதமடைகின்றன.தற்போது உள்ளாட்சி அமைப்பு வாயிலாக சாலை பள்ளங்களில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. இதில் புழுதி பறந்து, வாகனங்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, இந்த சாலையை புதிதாக அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை