உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மனைவி இறந்த சோகம்: கணவர் உயிரிழப்பு

மனைவி இறந்த சோகம்: கணவர் உயிரிழப்பு

திருவேற்காடு: திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம், அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜா, 60. அவரது மனைவி மல்லிகா, 50. சில தினங்களுக்கு முன், நாற்காலியில் அமர்ந்து இருந்தபோது, மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக மல்லிகா திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.இந்நிலையில், மனைவி இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் மாரடைப்பால் ராஜா மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ