உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பழுதான கார் மீது லாரி மோதி ஓட்டுனர் பலி

பழுதான கார் மீது லாரி மோதி ஓட்டுனர் பலி

மதுரவாயல், மதுரவாயல் ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன், 33. இவர், தன் காரில் தாம்பரம் -- மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக நேற்று அதிகாலை சென்றார்.காரை ஓட்டுனர் பிரபாகரன், 52 என்பவர் ஓட்டிச் சென்றார். அடையாளம்பட்டு ஊராட்சி அருகே, திடீரென கார் பழுதாகி நின்றது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த ரவி, 33 என்ற மெக்கானிக், காரை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, காரின் மீது கன்டெய்னர் லாரி மோதியது. இதில், கார் ஓட்டுனர் பிரபாகரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். பலத்த காயமடைந்த மெக்கானிக் ரவி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து விசாரித்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனர் மதுராந்தகத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் குமார், 52, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை