உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டூ - வீலர் திருடிய வாலிபருக்கு கம்பி

டூ - வீலர் திருடிய வாலிபருக்கு கம்பி

கூடுவாஞ்சேரி,:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் சிவசாமி முதல் தெருவில் வசித்து வருபவர் நேதாஜி, 19. இவர், நேற்று மாலை 3:00 மணிக்கு, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டி.வி.எஸ்., சூப்பர் எக்ஸெல் இருசக்கர வாகனத்தை திருடி, சாலையில் தள்ளிக் கொண்டு சென்றார்.அதில் சந்தேகமடைந்த அப்பகுதிவாசிகள், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நேதாஜியை பிடித்து விசாரித்தனர்.அப்போது, வாகனத்தை திருடி செல்வதை நேதாஜி ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, அவரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், வழக்கு பதிந்து நேதாஜியை கைது செய்து, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்