கஞ்சா விற்ற இருவர் குண்டர் சட்டத்தில் கைது
செங்கல்பட்டு:மதுராந்தகம் அடுத்த வையாவூர் மாம்பட்டு காந்திநகரைச் சேர்ந்த சிவா என்கிற சிவனேசன், 32, பாரூக், 26, ஆகியோர், கஞ்சா விற்பனை செய்தனர். தகவலறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், கடந்த ஆக., 18ம் தேதி, இருவரையும் கைது செய்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு, எஸ்.பி., சாய் பிரணீத் பரிந்துரை செய்தார். இதையேற்று, இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் சினேகா நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன் பின், புழல் சிறையில் உள்ள சிவா என்கிற சிவனேசன், பாரூக் ஆகியோரிடம் குண்டர் சட்ட நகலை போலீசார், நேற்று வழங்கினர்.