உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குட்கா விற்ற இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது

திருப்போரூர்:திருப்போரூர் சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, நேற்று முன்தினம் திருப்போரூர், மானாமதி போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து போலீசார், பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.அப்போது, சிறுதாவூரில் செல்வகுமார், 42, என்பவரின் மளிகை கடையில் சோதனையிட்டனர். அப்போது, அக்கடையில் ஹான்ஸ், பாக்கு என, 500 கிராம் போதை பொருட்கள் சிக்கின.மானாமதியில், பிரசன்னா,19, என்பவரது மளிகை கடையில் சோதனையிட்ட போது, அக்கடையிலும் ஹான்ஸ் பாக்கெட்கள் உட்பட 1.5 கிலோ பொருட்கள் சிக்கின.இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ