மேலும் செய்திகள்
பொத்தேரியில் கஞ்சா விற்ற மூவர் கைது
11-Nov-2024
மறைமலை நகர்:மறைமலை நகர் ரயில் நிலையம் அருகில், நேற்று முன்தினம் இரவு, மறைமலை நகர் குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த இரண்டு பேரை பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.அதில் ஒருவர், தாம்பரம் அடுத்த இரும்புலியூரை சேர்ந்த விஜய், 21, என்பதும், கடந்த 7ம் தேதி காட்டாங்கொளத்துார் பகுதியில் கோகுலபாஸ்கர் என்பவர் வீட்டில், பூட்டை உடைத்து மூன்று சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றதும் தெரிய வந்தது.மற்றொருவர், சிங்கபெருமாள் கோவில் அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், 28, என்பதும், கருநிலம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி, 65, என்பவர் வீட்டில், கடந்த ஜூலை மாதம் பூட்டை உடைத்து, நான்கு சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றதும் தெரிய வந்துள்ளது.இருவரிடமும் நடத்திய சோதனையில், மூன்று சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணைக்கு பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
11-Nov-2024