உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடுக்கலுார் சாலையில் பள்ளம் சீரமைக்க வலியுறுத்தல்

கடுக்கலுார் சாலையில் பள்ளம் சீரமைக்க வலியுறுத்தல்

செய்யூர்:கடுக்கலுார் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். செய்யூர் அருகே கடுக்கலுார் கிராமத்தில், செய்யூர் - சூணாம்பேடு இடையே செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை கடுக்கலுார், வெடால், ஒத்திவிளாகம், சூரக்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையாகும். தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன. கடுக்கலுார் விநாயகர் கோவில் அருகே, சாலை நடுவே பள்ளம் ஏற்பட்டு உள்ளதால், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்கு ஆளாகின்றனர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை நடுவே உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ