உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர் எம்.எல்.ஏ.,வை வழிமறித்து வி.சி., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செய்யூர் எம்.எல்.ஏ.,வை வழிமறித்து வி.சி., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செய்யூர், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட நல்லுார் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் மாலை மறுவாழ்வு மையத்தில் கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க செய்யூர் வி.சி., எம்.எல்.ஏ., பாபு கூட்டணி கட்சியினருடன் காரில் சென்றார்.பாதி வழியில் கார்களை வழி மறித்து இடைகழிநாடு வி.சி.க., பேரூர் செயலர் அகிலன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட வி.சி., கட்சியினர் செய்யூர் எம்.எல்.ஏ., வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வந்து நேரில் ஆய்வு செய்து மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, எம்.எல்.ஏ.,வை திரும்பிப்போக சொல்லி கோஷம் எழுப்பினர்.சொந்த கட்சியினரே எம்.எல்.ஏ., பாபுவை வழிமறித்து கண்டன ஆர்க்பாட்டத்தில் ஈடுபட்டு, விழாவிற்கு செல்ல விடமால் தடுத்து நிறுத்திய நிகழ்வு, செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி