திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம்வேதகிரீஸ்வரர் கோவில், சித்திரை பெருவிழாவில், முக்கிய உற்சவம் இல்லாத நாட்களில் லோக்சபா தேர்தல் நடப் பதால், பக்தர்கள் நிம்மதிய டைந்தனர்.ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கும் இக்கோவிலில், ஆண்டுதோறும் முக்கிய உற்சவமாக, சித்திரை பெருவிழா நடக்கிறது.பத்து நாட்கள் நடக்கும் விழாவில், மூன்றாம் நாள் உற்சவமாக, வெள்ளி அதிகார நந்தி, அறுபத்து மூன்று நாயன்மார் கிரிவலம் செல்வர். ஏழாம் நாள் உற்சவமாக, வேத கிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன் உள்ளிட்ட சுவாமியர், திருத்தேரில் வீதியுலா செல்வர்.இவ்விரண்டு உற்சவங்களிலும், சுவாமியரை தரிசிக்க சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பல்லாயிரம் பேர் திரள்வர்.இவ்விழா, ஏப்., 14ம் தேதி துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது. உற்சவத்திற்கு இடையே, ஏப்., 19ல் லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தலன்று முக்கிய உற்சவமாக இருந்தால் பக்தர்களிடம் குழப்பம், சிரமம் ஏற்படும்.ஆனால், இரண்டு முக்கிய உற்சவங்களும், தேர்தல் நாளன்று வராததால், பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.