உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுமி உட்பட இருவரிடம் அத்துமீறல் வி.ஜி.பி., ஊழியருக்கு போக்சோ

சிறுமி உட்பட இருவரிடம் அத்துமீறல் வி.ஜி.பி., ஊழியருக்கு போக்சோ

நீலாங்கரை, சென்னை அமைந்தகரையை சேர்ந்த ஒரு பெண், தன் உறவினர் மற்றும் 16 - 19 வயதுடைய இரு மகள்களுடன், இரு தினங்களுக்கு முன், இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள 'தீம் பார்க்'கிற்கு சென்றார்.அங்கு தண்ணீர் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த சிறுமி உட்பட இருவரிடமும், அங்கு பணியில் இருந்த ஊழியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.இது குறித்து சிறுமியின் தாய், வி.ஜி.பி., நிர்வாகத்திடமும் நீலாங்கரை மகளிர் போலீசிலும் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், இ.சி.ஆரைச் சேர்ந்த சுரேந்தர், 27, என்பவர் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. நேற்று, அவரை போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !