உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்லுாரி கிரிக்கெட் போட்டி விவேகானந்தா சாம்பியன்

கல்லுாரி கிரிக்கெட் போட்டி விவேகானந்தா சாம்பியன்

சென்னை:டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, சென்னையில் நடந்து வந்தது. 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.அனைத்து போட்டிகளின் முடிவில், குருநானக் மற்றும் ஆர்.வி.கே., விவேகானந்தா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.நேற்று, சேப்பாக்கம் எம்.ஏ., சிதம்பரம் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் விளையாடிய குருநானக் அணி, 35 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 121 ரன்களை எடுத்தது.அடுத்து களமிறங்கிய விவேகானந்தா அணி, 31 ஓவர்களில், மூன்று விக்கெட் இழந்து, 125 ரன்களை எடுத்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. அனைத்து போட்டிகளின் முடிவில், அதிகப்படியான 425 ரன்களை அடித்த குருநானக் வீரர் கணேஷ், சிறந்த வீரருக்கான பட்டத்தை தட்டிச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை