உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மழைநீர் கால்வாயில் கழிவு நீர் தேக்கம்

மழைநீர் கால்வாயில் கழிவு நீர் தேக்கம்

மறைமலை நகர்:மறைமலை நகர் சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உள்ள தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாக்கடையில் விடப்பட்டு காந்திநகர் பகுதியில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு அருகில் உள்ள ஏரியில் விடப்படுகிறது.சிப்காட் பகுதியில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பாதாள சாக்கடை திட்டம் உள்ளது. மற்ற பகுதிகளில் இல்லை. இதன் காரணமாக பாதாள சாக்கடை திட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் கழிவு நீரை, மழை நீர் செல்லும் வடிகால் வாயிலிலேயே விடப்படுகின்றன. எனவே மழைநீர் வடிகாலில் கழிவுகள் விடப்படுவதை தடுக்க நடவடிக்கை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை