உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கேளம்பாக்கம் ஊராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு

கேளம்பாக்கம் ஊராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு

திருப்போரூர்:கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு பொதுமக்கள்ளின் நலனுக்காக பல்வேறு கட்சியினர், பொது இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து வருகின்றனர்.அந்த வகையில், திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் ஊராட்சி தி.மு.க., சார்பில், ஊராட்சி தலைவர் ராணி தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா, நேற்று நடந்தது.திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் பங்கேற்று, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.வெள்ளரிப்பழம், தர்பூசணி, இளநீர், நுங்கு, குளிர்பானங்கள், மோர் உள்ளிட்ட பல்வேறு குளிர்ச்சி தரும் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி