உயர்கோபுர மின்விளக்கு அமையுமா?
மதுராந்தகம், அக். 6-மதுராந்தகத்தில் இருந்து உத்திரமேரூர் வழியாக, காஞ்சிபுரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.இதில், வேடந்தாங்கல் பகுதியில் இருந்து புழுதிவாக்கம் கூட்டு சாலை வழியாக, திருமலை வையாவூர், புக்கத்துறை வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டுச்சாலை சந்திப்பு பகுதியில், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், போதிய வெளிச்சம் இன்றி உள்ளதால், இரவு நேரங்களில் சாலையை கடப்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, மாநில நெடுஞ்சாலைத் துறையினர், இப்பகுதியை ஆய்வு செய்து, உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.