உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பனையூரிலுள்ள கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?

 பனையூரிலுள்ள கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?

செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பனையூர் கிராமத்தில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, பேரூராட்சி சார்பாக 2013ல், பனையூர் மாமரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சத்திரகுளக்கரையில், கழிப்பறை வளாகம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது. பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், சுகாதார வளாகம் பழுதடைந்தது. இதையடுத்து 2022ம் ஆண்டு, இடைக்கழிநாடு பேரூராட்சி 15வது நிதி ஆணைய மானியத்தில் சீரமைக்கப்பட்டது. சீரமைக்கப்பட்டு 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், இன்னும் சுகாதார வளாகம் செயல்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி அதிகாரிகள், சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். - அருண்ராஜ் குமார்: பனையூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை