உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெரியகயப்பாக்கத்தில் சமுதாய நலக்கூடம் வருமா?

பெரியகயப்பாக்கத்தில் சமுதாய நலக்கூடம் வருமா?

சித்தாமூர்:பெரியகயப்பாக்கம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.பெரியகயப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் சின்னகயப்பாக்கம், தோட்டிக்குப்பம், புத்துார், இந்தலுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இப்பகுதியில் சமுதாய நலக்கூடம் இல்லாததால், மக்கள் தங்களது குடும்பங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்த நாள் விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை சித்தாமூர், அச்சிறுபாக்கம், மேல்மருவத்துார் உள்ளிட்ட பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் நடத்தி வருகின்றனர்.தனியார் திருமண மண்டபங்களில் வாடகை 20,000 முதல் 50,000 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் சுப நிகழ்ச்சிகளை, தனியார் மண்டபங்களில் நடத்த மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதி மக்களின் நலன் கருதி, பெரியகயப்பாக்கம் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ