மேலும் செய்திகள்
அகில இந்திய வாலிபால் சென்னை பல்கலை சாம்பியன்
13-Jan-2025
சென்னை,ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் லட்சுமி நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், நங்கநல்லுாரில் கடந்த மூன்று நாட்கள், வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் சீனியர் பெண்கள் என, மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.பள்ளி மாணவருக்கான இறுதிப் போட்டியில், கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ., பள்ளி அணி, 25 - 19, 25 - 20 என்ற கணக்கில், ஆலந்துார் ஏ.ஜெ.எஸ்., பள்ளி அணியை தோற்கடித்து, முதலிடத்தை பிடித்தது.அதேபோல், மூன்றாம் இடத்திற்கான போட்டியில், ஆலந்துார் மான்போர்டு பள்ளி அணி, 25 - 19, 25 - 18 என்ற கணக்கில், நங்கநல்லுார் செல்லம்மாள் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.சீனியர் மகளிருக்கான போட்டியில், நங்கநல்லுார் பினாக்கிள் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் சென்னை எஸ்.டி.ஏ.டி., அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான ஆட்டத்தில், 25 - 20, 24 - 27, 25 - 22 என்ற கணக்கில், பினாக்கிள் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது. மூன்றாம் இடத்திற்கான போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி, 22 - 25, 25 - 20, 25 - 19 என்ற கணக்கில் சிவந்தி அணியை வீழ்த்தியது.
13-Jan-2025