உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செங்கல்பட்டில் பணி மந்தம்

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செங்கல்பட்டில் பணி மந்தம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில், 14 இடங்களில் நடைபெற்று வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு நகராட்சியில் அனுமந்தபுத்தேரி, குண்டூர் ஆகிய பகுதிகளில் 2005ம் ஆண்டு, நக ராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல் படுத்தப்பட்டது. இந்நிலையத்தில் இருந்து தினமும், நகரவாசிகள் குடிநீர் எடுத்துச் செல்கின்றனர். இத்திட்டம் நகரவாசிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து அண்ணா நகர், அண்ணா சாலை, வேதப்பர் தெரு, காந்தி சாலை, ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்ட, 12 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன் பின், நகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை செயல்படுத்த, நகராட்சி கூட்டத்தில், கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி பகுதியில் 12 இடங்களில், ஆழ்துளைக் கிணறு மற்றும் மின் இணைப்பு பெறும் வசதிக்கு, 46 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியது. தொடர்ந்து, மேற்கண்ட இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள், மந்தமாக நடைபெற்று வருகின்றன. எனவே, இப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை